Wednesday, August 22, 2007

உணர்ந்துகொள் !


வெற்றிகள் உனக்கு
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்...

மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்....

உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை...

உன் வழிகலெங்கும்
தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...

நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்

உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்...

Wednesday, May 30, 2007

நீ மட்டும் நிறுத்தி விடாதே !


தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...

நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?

நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...

எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!

நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...

Tuesday, May 15, 2007

உனக்கான காத்திருப்புக்களிலெல்லாம்

உனக்கான காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும் மனதின்வயது,
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.
யெஸ்.பாலபாரதி

Thursday, May 10, 2007

நம்பிக்கை...





தன் மீது

மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை

தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.

அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்

அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

Friday, April 27, 2007

காதல் கனவு


உன்னைக் காணும் வரை,

காதல் எனக்கு “கனவு காணும்” விஷயம் மடி

ஆனால் இப்போதோ,

என் கனவுகளில் எல்லாம் காதலே நிறைகிறது!
-விஜய்

Tuesday, April 24, 2007

உனக்காக நான் இருக்கையல்....


உனக்காக நான் இருக்கையல் ,
எதற்காக நீ அலுகிறாய்.........
-விஜய்

Thursday, March 29, 2007

Five Rules Of Successful Person

Never Outshine the Master
தலைவனின் தோள் மட்டுமே வளர்

உங்களுக்கு மேல் இருப்பவர் அந்த இடத்திலேயே வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கவரும் நோக்கத்தோடு அதீதமாக செயல்பட்டால், 'பெரியவர்'களுக்கு வயிற்றைக் கலக்கும். மேலதிகாரிகளை புத்திசாலியாகக் காட்டி வைத்திருப்பதுதான் சாமர்த்தியம்.

Never put too Much Trust in Friends, Learn how to use Enemies
நண்பர்களை நம்பாதே. எதிரிகளை உபயோகிக்க அறி

தோழர்கள் பொறாமை பிடித்தவர்கள். முதுகில் குத்திவிடும் ஆபத்தும் உண்டு. கொஞ்ச நாள் முன்னாடி பகைத்துக் கொண்டவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள். பழைய பகையை ஆற்றுப்படுத்தும் பயம் கொண்ட கடமை உணர்ச்சியுடன் செயல்படுவான். உனக்கு எதிரியே இல்லை என்றால், எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து யோசி.

Conceal your Intentions
நோக்கங்களை புதைஆழ் எண்ணங்களை மறை.

செயல்களின் பின்னிருக்கும் காரணங்களை வெளிக்காட்டாதே. நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர்களுக்கு விளங்காவிட்டால், எப்படி உன்னுடன் சண்டைக்கு வரமுடியும்? முடிந்தவரை தவறான பாதையில் இட்டுச் சென்று, புகை மண்டலத்தில் இருத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு தெளிவு பிறப்பதற்குள், உன் காரியம் கடையேறியிருக்கும்.

Always Say Less than Necessary
சுருங்க சொல்புரியாத சொற்றொடர்களை கையாள்.

எல்லா இடத்திலும், ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டிருந்தால், உனக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக போட்டு உடைக்காமல், கழுவுகிற மீனில் நழுவும் பாணியில் எழுது. ஆதிக்கவாதிகள் வாயைத் திறந்தால், முத்து உதிர்வது போல் குறைவாகப் பேசுபவர்கள்.

So Much Depends on Reputation - Guard it with your Life
கீர்த்தியை கா

ஆளுமையின் முக்கிய அங்கம் சமூகத்தில் நற்பெயர். நல்ல பெயர் எடுத்திருப்பதனாலேயே, பிறரை மிரட்டி அடக்கலாம். துளி கீறல் விழுந்தாலும், காற்றில் பறக்கும் பஞ்சு கூட பேப்பர் வெயிட்டாக கல்லெறிந்து ஏளனம் செய்துவிடும். சேறு அடிக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்து. எதிரிகளுக்கு அபகீர்த்தி வருமாறு சேறு அடி. அடித்தபிறகு அவர்களின் மதிப்பு சந்தி சிரிப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்.

மற்றவற்றையும் அறிய: The 48 Laws of Power