Wednesday, May 30, 2007

நீ மட்டும் நிறுத்தி விடாதே !


தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...

நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?

நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...

எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!

நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...

Tuesday, May 15, 2007

உனக்கான காத்திருப்புக்களிலெல்லாம்

உனக்கான காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும் மனதின்வயது,
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.
யெஸ்.பாலபாரதி

Thursday, May 10, 2007

நம்பிக்கை...





தன் மீது

மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை

தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.

அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்

அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.